ஸ்ரீ சூர்ய மங்களம் பகளாமுகி தேவி கோயிலில் நவராத்திரி திருவிழா

அம்பாசமுத்திரம் அருகே தெற்குப் பாப்பான்குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சூர்யமங்களம் பகளாமுகி தேவி கோயில் ஸ்ரீ ராஜகாளியம்மன் சன்னிதியில் செப். 21 முதல் நவராத்திரி திருவிழா நடைபெறுகிறது.

அம்பாசமுத்திரம் அருகே தெற்குப் பாப்பான்குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சூர்யமங்களம் பகளாமுகி தேவி கோயில் ஸ்ரீ ராஜகாளியம்மன் சன்னிதியில் செப். 21 முதல் நவராத்திரி திருவிழா நடைபெறுகிறது.
இதையொட்டி தினமும் அதிகாலை 4.45 மணிக்கு பள்ளி உணர்த்தியும், 5 மணிக்கு நிர்மல்யா தரிசனம், 6 மணிக்கு ஈஷா பூஜை, 6.30 மணிக்கு மஹா கணபதி ஹோமம், 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை, 9.30 மணிக்கு பாயாசபலி, 11.30 மணிக்கு உச்சிகால பூஜை மற்றும் குருதி தர்ப்பணத்தைத் தொடர்ந்து நடை சாத்தப்படும். தொடர்ந்து மாலை 5 மணிக்கு நடை திறப்பைத் தொடர்ந்து 6 மணிக்கு சந்தியா கால பூஜை, மஹா தீப ஆராதனை, 7 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, 8.30 மணிக்கு இரவு பூஜையைத் தொடர்ந்து நடை சாத்தப்படும்.
மேலும் (செப். 28) வியாழக்கிழமை துர்காஷ்டமி, (செப். 29)
மஹாநவமி, செப். 30 விஜயதசமி ஆகிய நாள்களில் பஞ்ச வாத்யங்களுடன் சிறப்புப் பூஜை நடைபெறும். (செப். 30) விஜயதசமி அன்று காலை 9 மணிக்கு 108 குடம் பாலாபிஷேகம், 11 மணிக்கு கோ பூஜை, 12 மணிக்கு திக்கு பூஜை நடைபெறும். இதையடுத்து நடை சாத்தப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com