தச்சநல்லூர் நெல்லையப்பர் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

திருநெல்வேலி, தச்சநல்லூரில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருநெல்வேலி, தச்சநல்லூரில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பழமை வாய்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் தேர்த் திருவிழா சிறப்பாக நடைபெறும். நிகழாண்டு விழாவையொட்டி, சுவாமி-அம்பாளுக்கு சனிக்கிழமை காலையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து, கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு மஹாதீபாராதனை நடைபெற்றது.
இம்மாதம் 23ஆம் தேதி வரை தினமும் காலை, மாலையில் சிறப்பு வழிபாடு, சப்பரத்தில் சுவாமி வீதியுலா ஆகியவை நடைபெறவுள்ளன. 9ஆம் திருநாளான இம்மாதம் 22ஆம் தேதி காலை 10.05 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். பின்னர், பிற்பகல் 1 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. 23 ஆம் தேதி சுவாமி, அம்பாள், பஞ்சமூர்த்திகளுக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com