"பெண்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும்'

பெண்களுக்கான உரிமைகளைப் பாதுகாத்தல்,  வன்முறையில்லாத சமுதாயம் அமைத்தல் போன்றவை குறித்து, திருநெல்வேலியில்

பெண்களுக்கான உரிமைகளைப் பாதுகாத்தல்,  வன்முறையில்லாத சமுதாயம் அமைத்தல் போன்றவை குறித்து, திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சர்வதேச மகளிர் தின கருத்தரங்கில்  வலியுறுத்தப்பட்டது. 
தமிழ்நாடு பெண் ஆசிரியர்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில்  மாநில அளவில் நடைபெற்ற  இக்கருத்தரங்கின் முதல் அமர்வுக்கு, அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மூ. மணிமேகலை தலைமை வகித்தார். திருநெல்வேலி மாவட்டத் துணை ஒருங்கிணைப்பாளர் டி. ஜேனட், கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் த.சகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  உலகமயச் சூழலில் பெண்களின் நிலை எனும் தலைப்பில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலர் பி. கற்பகம் பேசினார். 
இரண்டாவது அமர்வுக்கு மாவட்டத் துணை ஒருங்கிணைப்பாளர் டி. செந்தாமரைசெல்வி தலைமை வகித்தார். மாநில துணை ஒருங்கிணைப்பாளர் டி. லீலாவதி முன்னிலை வகித்தார். வீடு- சங்கம்- பெண்கள் எனும் தலைப்பில் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் மாநில அமைப்பாளர் எம். மகாலட்சுமி பேசினார். கருத்தரங்கில், திண்டுக்கல், தேனி, கரூர், நாகப்பட்டினம், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, சிவகங்கை என பல்வேறு மாவட்டப் பிரதிநிதிகள், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலர் செ. பால்ராஜ், மாவட்டத் தலைவர் பி. ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
ஜம்மு-காஷ்மீரில் பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்ட சிறுமி ஆஷிபாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பெண்கள் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். ஆண் பெண் சமத்துவத்தை நிலை நாட்ட வேண்டும். வன்முறையற்ற சமுதாயம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியை, குமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டி. ராஜகுமாரி தொகுத்து வழங்கினார்.  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மா. ஹில்டாராணி வரவேற்றார். திண்டுக்கல் மாவட்டத் துணை ஒருங்கிணைப்பாளர் வளர்மதி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com