மணிமுத்தாறு பெருங்காலில் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை

முன்கார் சாகுபடிக்காக மணிமுத்தாறு பெருங்காலில் தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

முன்கார் சாகுபடிக்காக மணிமுத்தாறு பெருங்காலில் தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மணிமுத்தாறு பெருங்கால் பாசன விவசாயிகள் சார்பில் அளிக்கப்பட்ட மனு:
அம்பாசமுத்திரம் வட்டம், ஜமீன்சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம், தெற்குபாப்பான்குளம், மூலச்சி, உலுபடிபாறை போன்ற கிராமங்களில் உள்ள விவசாயிகள் மணிமுத்தாறு அணையின் பெருங்கால் (40 அடி கால்) மூலம் பாசனவசதி பெற்று வருகிறோம். கடந்த ஆண்டில் மழையின்மையால் இப்பகுதியில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு வாங்கிய கடன்களை அடைக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். 
இப்போது மணிமுத்தாறு அணையில் 82 அடி தண்ணீர் உள்ளது. எனவே, மே 1 ஆம் தேதி அன்று முன்கார் சாகுபடிக்காக பெருங்கால் பாசனத்தில் தண்ணீர் திறக்க வேண்டும். மேலும், 100 நாள்கள் தொடர்ந்து தண்ணீர் கொடுத்தால், அதன்மூலம் பயிர்சாகுபடி செய்து சிரமத்தில் இருந்து மீளமுடியும். இதற்கு முந்தைய ஆண்டுகளில் அணையில் 55 அடி தண்ணீர் இருந்த நிலையிலும் முன்கார் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. எனவே, மாவட்ட நிர்வாகம் எங்கள் கோரிக்கையைப் பரிசீலிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com