சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி தொடக்கம்

திருநெல்வேலியில் சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

திருநெல்வேலியில் சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
திருவாவடுதுறை ஆதீனத்தின் சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி மையம் சார்பில் 2018-19 ஆம் ஆண்டுக்கான 12 ஆவது தொகுப்பு பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. அமைப்பாளர் கு.முத்துசாமி வரவேற்றார். ஜவுளி முகமை சங்கச் செயலர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். விவேகானந்த கேந்திர சித்த மருத்துவ அலுவலர் வே.கணபதி வாழ்த்திப் பேசினார். தெற்கு மடத்தின் அதிபர் சிவ. ஸ்ரீவித்யா சங்கர சிவாச்சாரியார் ஆசியுரையாற்றினார். சைவ சமய வரலாறு, பன்னிரு திருமுறை வரலாறு என்ற தலைப்பில் பேராசிரியர் மீ.முருகலிங்கம் வகுப்பு எடுத்தார். பயிற்சி வகுப்பில் 108 மாணவர்-மாணவிகள் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் இரா.முத்துகுமாரசாமி, கணேசன், முருகேசன், வள்ளிநாயகம், அருணாசலம் ஆகியோர் செய்திருந்தனர். அடுத்த பயிற்சி வகுப்பு மார்ச் 11 ஆம் தேதி நடைபெற உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com