பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் மாசிப் பெருந்திருவிழா: பிப். 20இல் கொடியேற்றம்

பாவூர்சத்திரம் வென்னிமலை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயில் மாசிப் பெருந்திருவிழா பிப்.20இல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பாவூர்சத்திரம் வென்னிமலை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயில் மாசிப் பெருந்திருவிழா பிப்.20இல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
பாவூர்சத்திரம் காமராஜ்நகரில் அமைந்துள்ள வென்னிமலை அருள்மிகு வள்ளிதேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசிப் பெருந்திருவிழா பிப். 20ஆம் தேதி தொடங்கி மார்ச் 2ஆம் தேதி வரை 11 நாள்கள் நடைபெறுகிறது. இதையொட்டி, திங்கள்கிழமை (பிப்.19) மாலை 6 மணிக்கு கொடிப்பட்டம் ஊர்வலம் நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை (பிப். 20) அதிகாலை 5.15 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது.
முன்னதாக, அதிகாலை காலை 4 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெறுகிறது. அன்றைய திருவிழா காமராஜ்நகர் பொதுமக்கள் சார்பிலும், புதன்கிழமை 2ஆம் நாள் திருவிழா சைவ வேளாளர் சமுதாயம் சார்பிலும், வியாழக்கிழமை 3ஆம் நாள் திருவிழா தேவர் சமுதாயம் சார்பிலும், வெள்ளிக்கிழமை 4ஆம் நாள் திருவிழா  யாதவர் சமுதாயம் சார்பிலும், சனிக்கிழமை 5ஆம் நாள் திருவிழா பட்டங்கட்டியார் சமுதாயம் சார்பிலும், ஞாயிற்றுக்கிழமை 6ஆம் நாள் திருவிழா அரிசன சமுதாயம் சார்பிலும், திங்கள்கிழமை 7ஆம் நாள் திருவிழா விஸ்வகர்மா சமுதாயம் சார்பிலும், செவ்வாய்க்கிழமை 8ஆம் நாள் திருவிழா செங்குந்த முதலியார் சமுதாயம் சார்பிலும், புதன்கிழமை 9ஆம் நாள் திருநாள் வணிக வைசிய செட்டியார் சமுதாயம் சார்பிலும், வியாழக்கிழமை 10ஆம் நாள் திருநாள் (மார்ச் 1) நாடார் சமுதாயம் சார்பிலும் நடைபெறுகிறது.
அன்று காலை 6 மணி கீழப்பாவூர் சிவன்கோயிலில் இருந்து குறும்பலாப்பேரி பக்தர்கள் குறும்பலாப்பேரி வழியாகவும், பனையடிப்பட்டி பக்தர்கள் பத்திரகாளியம்மன் கோயிலில் இருந்தும், திப்பணம்பட்டி பக்தர்கள் பிள்ளையார் கோயிலில் இருந்தும், பாவூர்சத்திரம் பக்தர்கள் முப்புடாதிஅம்மன் கோயிலில் இருந்தும் வேல் குத்தி, பால்குடம் மற்றும் காவடி எடுத்து வருவர். மதியம் 12 மணிக்கு உச்சி கால பூஜையும், மாலை 5 மணிக்கு சிறப்பு புஷ்பாஞ்சலியும், இரவு 8 மணிக்கு சுவாமி அலங்கார சப்பரத்தில் திருவீதி உலா வருதலும், இரவு 12 மணிக்கு அர்த்தசாம பூஜையும் நடைபெறுகிறது.
11ஆம் நாள் திருநாள் (வெள்ளிக்கிழமை) பிராமண சமுதாயம் சார்பில் நடைபெறவுள்ளது. அன்று மாலை சுவாமி தீர்த்தவாரிக்கு பின் பூஞ்சப்பரக் காட்சி மற்றும் புஷ்பாஞ்சலி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com