"பிளஸ் 1 தேர்வு அறை கண்காணிப்பாளர் பணி: குலுக்கல் தேதியை மாற்ற வேண்டும்'

பிளஸ்-2 தேர்வு அறை கண்காணிப்பாளர் குலுக்கல் தேதியை மாற்ற வேண்டுமென ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பிளஸ்-2 தேர்வு அறை கண்காணிப்பாளர் குலுக்கல் தேதியை மாற்ற வேண்டுமென ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் பிளஸ்-1 செய்முறைத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. 
இந்நிலையில் மாவட்டத்தில் ஒரு சில கல்வி மாவட்டங்களில் வருகிற 19 ஆம் தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான தேர்வு அறை கண்காணிப்பாளர் பணிநியமனம் தொடர்பான குலுக்கல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பிளஸ்-1 செய்முறைத் தேர்வை நடத்துவதா அல்லது குலுக்கலில் பங்கேற்பதா என்ற குழப்பம் ஆசிரியர்களிடையே ஏற்பட்டுள்ளது. 
 மேலும், தேர்வு அறை கண்காணிப்பாளர் பணி நியமனத்திற்கு குலுக்கல் முறை என்றால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள்தான் குலுக்கலில் பங்கேற்க வேண்டுமே தவிர பெருவாரியான ஆசிரியர்களுக்குப் பதிலாக மற்றொரு ஆசிரியரை குலுக்கலில் பங்கேற்க கல்வித்துறை அனுமதிப்பது சரியான தீர்வாகாது. ஆகவே, இவ்விஷயத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உடனே தலையிட்டு குலுக்கல் நடைபெறும் தேதியை தள்ளி வைக்க வேண்டும். இல்லையெனில் குலுக்கல் நடைபெறும் நாளில் பிளஸ்-1 அரசு பொது செய்முறைத் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com