பிளஸ் 1 பொதுத் தேர்வு: விண்ணப்பிக்க சிறப்பு அனுமதி

பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.

பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பாக மண்டல துணை இயக்குநர் (பொறுப்பு) தேவவரம் இனிய வேந்தன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கு தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாள்களுக்குள் விண்ணப்பிக்காத தனித்தேர்வர்களிடம் இருந்து சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தனித்தேர்வர்கள் இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்காக அனைத்து கல்வி மாவட்டங்களிலும் அரசு தேர்வுத் துறை சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. வரும் 17-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களின் விவரத்தை ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
தேர்வுக் கட்டணம் ரூ.150, இதர கட்டணம் ரூ.35, இணையதள பதிவுக் கட்டணம் ரூ.50, சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.1,000 என மொத்தம் ரூ.1,235 செலுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com