பொங்கல் பொருள்கள் வாங்க குவிந்த மக்கள்

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலி நகரம் மற்றும் பாளையங்கோட்டையில் பொங்கல் பொருள்கள் வாங்க மக்கள் கூட்டம் சனிக்கிழமை அலை மோதியது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலி நகரம் மற்றும் பாளையங்கோட்டையில் பொங்கல் பொருள்கள் வாங்க மக்கள் கூட்டம் சனிக்கிழமை அலை மோதியது.
திருநெல்வேலி நகரத்தில் உள்ள நேதாஜி சந்தை, நயினார்குளம் சந்தையில் காய்கனிகளை வாங்க பொதுமக்கள் குவிந்தனர். திருநெல்வேலி நகரில் உள்ள மேலரத வீதி முழுவதும் கரும்பு விற்பனை களைகட்டியது. இதேபோல் வடக்கு ரதவீதியில் பிரதான துணிக் கடைகள் முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பொங்கல் பண்டிகை விற்பனையை முன்னிட்டு, ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். நான்கு ரத வீதிகளில் உள்ள கேமராக்கள் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. திருநெல்வேலி நகரத்தைப் பொறுத்தவரையில் சனிக்கிழமை இரவு முழுவதும் கடைகள் திறந்திருந்தன. இதனால் இரவு முழுவதும் பொதுமக்கள் பொங்கல் பொருள்களை வாங்கிக் கொண்டிருந்தனர்.
பாளை. மார்க்கெட் பகுதியும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. பொங்கல் பொருள்கள், கரும்பு விற்பனை என அனைத்து விற்பனைகளும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com