காமராஜர் பிறந்த நாள்: நாளை 2 ஆயிரம் மரக்கன்றுகள் நட முடிவு

காமராஜர் பிறந்த நாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 15) திருநெல்வேலி கிழக்குமாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் 2 ஆயிரம் மரக்கன்றுகள்

காமராஜர் பிறந்த நாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 15) திருநெல்வேலி கிழக்குமாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன என்றார் முன்னாள் மத்திய இணையமைச்சர் ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன்.
வண்ணார்பேட்டையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் பிறந்த நாள் விழாவில் கேக் வெட்டிய பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறியது:  தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.  மாநிலத் தலைவர் திருநாவுக்கரசரின் பிறந்த நாளையொட்டி கேக் வெட்டியும்,  பட்டாசு வெடித்தும் தொண்டர்கள் கொண்டாடியுள்ளனர்.  முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாளை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 15) சிறப்பாக கொண்டாடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் பாளையஞ்சாலைக்குமாரசாமி கோயிலில் இருந்து திருநெல்வேலி சந்திப்பு காமராஜர் சிலை வரை 116 பெண்கள் முளைப்பாரி சுமந்தும், 116 பேர் பால்குடம் சுமந்தும் ஊர்வலமாக சென்று மரியாதை செலுத்தப்பட உள்ளது.  நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதோடு,  1000 பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட உள்ளது.  
கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படுவதுடன்,  அவற்றிற்கு கூண்டுகள் அமைத்து தண்ணீர் ஊற்றி பராமரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.  மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கருவந்தா கிராமத்தில் காமராஜர் பெயரில் நூலகம் திறக்கப்பட உள்ளது.  சுரண்டையில் ரத்த தான முகாம் நடைபெற உள்ளது என்றார்.
மாவட்டத் தலைவர்கள் கே.சங்கரபாண்டியன் (மாநகர்),  பழனிநாடார் (மேற்கு),  எஸ்.கே.எம்.சிவகுமார் (கிழக்கு),  பொருளாளர் ராஜேஷ் முருகன், மாவட்ட துணைத் தலைவர் பானுசந்தர், மாவட்ட துணைத் தலைவர் உதயகுமார்,  சிறுபான்மைப் பிரிவு மாவட்டத் தலைவர் முகமதுஅனஸ்ராஜா,  விவசாய அணி மாநிலச் செயலர் வாகை கணேசன்,  மண்டல தலைவர்கள் தனசிங்பாண்டியன்,  ஐயப்பன்,  மாரியப்பன்,  சுல்தான் இப்ராஹிம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com