திருநெல்வேலி எழுச்சி தினம்: வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவிப்பு

திருநெல்வேலி எழுச்சி தினத்தையொட்டி, சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் செவ்வாய்க்கிழமை (மார்ச் 13) மாலை அணிவித்தனர்.

திருநெல்வேலி எழுச்சி தினத்தையொட்டி, சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் செவ்வாய்க்கிழமை (மார்ச் 13) மாலை அணிவித்தனர்.
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் 1908 , மார்ச் 13 ஆம் தேதிக்கு முக்கிய இடம் உண்டு. சுதந்திரப் போராட்ட வீரர் விபின் சந்திரபாலின் விடுதலை நாளை சுயராஜ்ய நாளாக கொண்டாடியதை குற்றமாக அறிவித்து, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., சுப்ரமணிய சிவா, பத்மநாப ஐயங்கார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து, 1908, மார்ச் 13ஆம் தேதி திருநெல்வேலியில் நிகழ்ந்த மிகப்பெரும் எழுச்சிப் போராட்டத்தை நினைவுகூரும் வகையில் அன்றைய தினம் திருநெல்வேலி எழுச்சி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நிகழாண்டு 110 ஆவது ஆண்டு தினத்தையொட்டி திருநெல்வேலி எழுச்சி தின நினைவேந்தல் குழு சார்பில் மாநகராட்சிப் பொருட்காட்சி மைதானத்தில் வ.உ.சி. நினைவு மணிமண்டபத்திலுள்ள வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
இதில், அக்குழுவின் அமைப்பாளர் சுந்தரலிங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத் தலைவர் இரா. நாறும்பூநாதன், பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் பே. ராஜேந்திரன், ம.தி.தா. இந்து கல்லூரி முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் ந. உஷாதேவி, 
ஆசிரியர் மு. சொக்கலிங்கம், பிரம்மநாயகம், தாணப்பன், வழக்குரைஞர் டி.ஏ. பிரபாகர் மற்றும் தமிழ் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் சார்பில் அதன் செயலர் கோ. கணபதிசுப்பிரமணியன், திருநெல்வேலி நகரம் வாசகர் வட்டத் தலைவர் ஜெயபாலன், துணைத் தலைவர் முத்துசாமி, அன்னை தெரசா அறக்கட்டளை தலைவர் க. மகேஷ் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com