ஜி.எஸ்.டி. வரியை 4 சதவீதமாக குறைக்க வலியுறுத்தல்

அனைத்துப் பொருள்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை 4 சதவீதமாக குறைக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அனைத்துப் பொருள்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை 4 சதவீதமாக குறைக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்கள் அடங்கிய மண்டல ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு அமைப்பின் நிறுவனர்- தலைவர் ஆர். சந்திரன்ஜெயபால் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் மயிலை எம். மாரித்தங்கம், செயலர் ஏ.கே. அப்துல்ஹாதி, பொருளாளர் கே. சுந்தரசேகர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், திருநெல்வேலி மாவட்ட அமைப்பாளர்களாக ஆர். டேவிட்ராஜ், சி. ஆனந்தன், ஏ. ஐயப்பன், ஜெ. ஜெபக்குமரர், தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளர்களாக எம். ராமசாமி, கே. லிங்க செல்வன், பண்டாரம், இ. குமரேசன், ஆர். ரவிகுமார், கன்னியாகுமரி மாவட்ட அமைப்பாளர்களாக எம். ராஜாமணி, ஜோ, ஆர்.எஸ். ராஜன், ஆர். டேனியல் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர், செய்தியாளர்களிடம் ஆர். சந்திரன் ஜெயபால் கூறியது: அனைத்து வணிகர்களுக்கும் அரசு சார்பில் அடையாள அட்டை வழங்க வேண்டும். அனைத்துப் பொருள்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை 4 சதவீதமாக குறைத்து, வரி செலுத்தும் முறையை எளிமைப்படுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்.
தமிழகத்தில் மழைக் காலங்களில் தண்ணீர் வீணாகாமல் தடுப்பணைகள் கட்ட வேண்டும். நீர்நிலைகள், ஏரிகள், குளங்களை 5 அடி வரை ஆழப்படுத்த வேண்டும். ஏரிகளின் கரைகளை 5 அடி உயர்த்தி பலப்படுத்த வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்பு குறித்து நடவடிக்கை எடுப்பதுடன், தமிழகத்திற்கு காவிரி நீரை பெற்று தர மத்திய- மாநில அரசுகள் முயற்சிக்க வேண்டும். வால்மார்ட் போன்ற நிறுவனங்களை அனுமதிக்கக்கூடாது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com