பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

பாளையங்கோட்டையில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு சனிக்கிழமை துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது.

பாளையங்கோட்டையில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு சனிக்கிழமை துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு 3 ஆவது மகளிர் பிரிவு தேசிய மாணவர் படை சார்பில் பள்ளி, கல்லூரிகளில் தேசிய மாணவர் படையில் இடம்பெற்றுள்ள மாணவிகளுக்கான சிறப்பு முகாம் இம்மாதம் 21 ஆம் தேதி தொடங்கியது. பாளை. சாராள் தக்கர் மகளிர் கல்லூரியில் தொடங்கிய இம்முகாம் 30 ஆம் தேதி வரை 10 தினங்கள் நடைபெறுகிறது.
முகாமில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு, வரைபட வாசிப்பு, தடை தாண்டுதல், துப்பாக்கி சுடுதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான துப்பாக்கி சுடும் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது. முகாமில், 250 க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில், லெப்டினல் கர்னல் சோகன் கணபதி தலைமையில் மேஜர் பன்னீர்செல்வம், சுபேதார் செல்வக்குமார், மாணவிகள் பிரிவு ஆய்வாளர் கோமதி, பள்ளி மற்றும் கல்லூரி தேசிய மாணவர் படை அதிகாரிகள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
இம்முகாமையொட்டி, இம்மாதம் 28, 29 ஆம் தேதிகளில் பாளையங்கோட்டையில் மாணவிகள் பங்கேற்கும் தூய்மை இந்தியா திட்டம், உடல் உறுப்பு தானம், போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி, பிரசாரம் போன்றவை நடைபெறும் என தேசிய மாணவர் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com