ஆளுநர் விருதுக்கான சாரண, சாரணியர் தேர்வு முகாம்

ஆளுநர் விருதுக்கான சாரண, சாரணியர் தேர்வு முகாம், திருத்துறைப்பூண்டி சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆளுநர் விருதுக்கான சாரண, சாரணியர் தேர்வு முகாம், திருத்துறைப்பூண்டி சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதன் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற முகாமுக்கு, பள்ளியின் நிர்வாக பிரதிநிதி சோமசுந்தரம் தலைமை வகித்தார். சாரணிய அமைப்பின் மாவட்டச் செயலாளர்கள் மீனாட்சி, லோகநாதன், நெடும்பலம் பள்ளி உதவி தலைமையாசிரியர் வெங்கடேசன்,  மாவட்ட சாரணிய அமைப்பு ஆணையர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியை லெட்சுமி பிரியா வரவேற்றார்.
சாரணர்களுக்கு முகாம் தலைவர்களாக பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்துக்கு செல்லத்துரை, திருவாரூர் கல்வி மாவட்டத்துக்கு செல்வக்கண்ணு, சாரணியர் பிரிவுக்கு முகாம் தலைவராக ஜெயலட்சுமி, உதவி தலைவர்களாக அனுராதா, குருதெட்சிணாமூர்த்தி, சக்கரபாணி,  ஜெயபிரகாஷ், இளையராஜா, ராஜலட்சுமி ஆகியோர் செயல்பட்டனர்.
முகாமில் உறுதிமொழி சட்டம், இறைவணக்கப் பாடல், கொடிப்பாடல், தேசிய கீதம், கொடி வகைகள், கை குலுக்கல் முறை,  வணக்கம் செய்யும் முறை, முதலுதவி, ஆக்கல் கலை, முகாம் கலை, மதிப்பீடு, கூடாரம் அமைத்தல் கயிற்றுக் கலை உள்ளிட்ட தலைப்புகளில் சோதனை செய்யப்பட்டன.
முகாமை மாவட்டக் கல்வி அலுவலர் மணிவண்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முகாம் ஏற்பாடுகளை மாவட்ட பண்டக காப்பாளர் அறிவு, சாரண ஆசிரியர்கள் ரவி, அய்யம்பெருமாள், பாலமுருகன், கலைச்செல்வன், சுமத்திராதேவி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
திருவாரூர் மற்றும் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டங்களில் 43 பள்ளிகளைச் சேர்ந்த 190 சாரணர்கள், 129 சாரணியர்கள், சாரண ஆசிரியர்கள் உள்ளிட்ட 356 பேர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com