உய்யக்கொண்டான்  வாய்க்காலில் முதலை? பொதுமக்கள் கூடியதால் போக்குவரத்து பாதிப்பு

திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்காலில் முதலை இருப்பதாக பரவிய வதந்தியால் பொதுமக்கள் ஏராளமானோர் கூடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்காலில் முதலை இருப்பதாக பரவிய வதந்தியால் பொதுமக்கள் ஏராளமானோர் கூடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருச்சி நீதிமன்றம் அருகே செல்லும் உய்யக்கொண்டான் வாய்க்காலில் புதன்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு முதலை ஒன்று வாயை திறந்தபடி நீந்துவதாக தகவல் பரவியது. இதையடுத்து கரையின்
ஒருபகுதியில் பொதுமக்கள் திரண்டனர். முதலை அசைந்து, அசைந்து அங்கேயே நீந்தியபடியே இருந்தது. இதேபோல், பாலத்தில் வந்த வாகனங்கள் அனைத்தும் அப்படியே நிறுத்தப்பட்ட வாகன
ஓட்டிகளும் வேடிக்கை பார்க்கத் தொடங்கினர். இதன்காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவல் அறிந்து வந்த போலீஸாரும் முதலை குறித்த தேடுதலில் ஆர்வம் செலுத்தினர். சுமார் 40 நிமிஷங்களுக்கு மேலாக வாய்க்காலில் யாரும் இறங்காமல் வேடிக்கை பார்த்தபடியே இருந்தனர்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் முதலை இருந்த கரைப்பகுதிக்கு சென்று அங்கிருந்த மரத்தின் மீது ஏறி, முதலையின் முகம் தெரிந்த பகுதியில் வாய்க்காலில் குதித்தார். பின்னர்
நீந்தி சென்று பார்த்தபோது முகம்போல தெரிந்தது பயணிகள் கொண்டு செல்லும் துணி சூட்கேஸ் திறந்த நிலையில் இருந்தது. அதன் மீது முட்புதர்கள் செடிகள் இருந்ததால் தண்ணீரில் அசைந்து
செல்லும்போது முதலை வாயை திறந்தபடியே இருப்பதாக தூரத்தில் இருப்பவர்களுக்கு தெரியவந்தது. அந்த பையை வெளியே எடுத்து பொதுமக்களிடம் காட்டியபிறகே முதலை ஏதுமில்லை என
அனைவரும் நிம்மதியடைந்தனர். இதையடுத்து, வாகனங்களை விரைந்து செல்ல அறிவுறுத்தி போக்குவரத்தை போலீஸார் ஒழுங்குபடுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com