'நம்பிக்கை, விடாமுயற்சி இருந்தால் சிறந்த தொழில்முனைவோர் ஆகலாம்'

நம்பிக்கை, விடாமுயற்சி, தேடல் இருந்தால் சிறந்த தொழில் முனைவோராகலாம் என்றார் பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் மைய இயக்குநர் ந. மணிமேகலை.

நம்பிக்கை, விடாமுயற்சி, தேடல் இருந்தால் சிறந்த தொழில் முனைவோராகலாம் என்றார் பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் மைய இயக்குநர் ந. மணிமேகலை.
தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கத்தின் சார்பில், திறன் மேம்பாட்டு செயல்முறை பயிற்சி அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்று மேலும் அவர் பேசியது:
தொழில்முனைய ஆர்வம் உள்ள பெண்களை வழிநடத்த, வங்கிக் கடன் பெற வழிவகை செய்ய வேண்டும். பெண்கள் மேம்பாடு அடைந்தால்தான் சமூகம் மேம்பாடு அடையும் என்ற நோக்கில் கடந்த 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மகளிர் தொழில் முனைவோர் சங்கம் இன்று சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நம்பிக்கை, விடாமுயற்சி, தேடல் இருந்தால் சிறந்த தொழில்முனைவோராகலாம்.
தொடர்ந்து பல தொழில்களை ஒருங்கிணைத்து வெற்றியும் பெறலாம் என்றார் மணிமேகலை.
கோதுமை அவல் புட்டு, கம்பு அவல், மோர்கஞ்சி போன்றவற்றுக்கானசெயல்முறை விளக்கத்தை ஆர். அலமேலுவும், சிறுதானியங்கள் மூலம் தயாரிக்கப்படும் உடனடி உணவுகளான புட்டு, ஆப்பம், இடியாப்ப மாவு, சத்துமாவு, பஜ்ஜி, பக்கோடா கலவைமாவு, பிரியாணி, கிச்சடி, புலாவு போன்றவற்றுக்கான பயிற்சி அளித்தார்.
சானிடரி நாப்கின் தயாரிப்புக்கான செயல்விளக்கம், மூலிகை சானிடரி நாப்கின் உபயோகத்தின் நன்மைகள் குறித்து வள்ளி பேசினார். மூலிகை மருந்து பொருள், அழகுசாதனப் பொருள்கள் உபயோகம் குறித்து ராஜேசுவரி குறிப்புகளை வழங்கினார்.
முன்னதாக, சங்கத்தின் துணைத் தலைவர் ராஜமகேசுவரி வரவேற்றார். மாநிலச் செயலர் வே. மல்லிகா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com