இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் கோயில் குடமுழுக்கு

திருச்சி மாவட்டம், இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்குப் பெருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனர்.

திருச்சி மாவட்டம், இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்குப் பெருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனர்.
  இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி மே 29ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து அங்குரார்ப்பணம், கும்ப அலங்காரம், திரவியாஹுதியுடன் தொடர்ந்து மூன்றுகால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
  வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.  பூர்ணாஹுதி, தீபாராதனைக்குப் பின்னர், காலை 7.15 மணிக்கு யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்றன.
  காலை 7.35மணிக்கு மேல் அருள்மிகு ஆதிமாரியம்மன் கோபுர விமானம், உற்சவ கோபுர விமானம், மற்றும் விநாயகர், தண்டபாணி, வெக்காளியம்மன், நாககன்னியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சன்னதிகளில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழக்கு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அருள்மிகு ஆதி மாரியம்மன் மூலவருக்கு குடமுழுக்கு நடத்தி புனித நீர் ஊற்றப்பட்டது.
  அதனைத் தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் சிறப்பு அபிஷேகமும், அதைத்தொடர்ந்து அம்மன் வீதியுலாவும் நடைபெற்றது.
  விழாவில், மண்ணச்சநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் மு. பரமேசுவரி, சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் இணை ஆணையர் சி.குமரதுரை,மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.
சுழலும் கேமரா மூலம் கண்காணிப்பு: பக்தர்கள் கூட்டத்தை பயன்படுத்தி நகைகள் திருடப்படுவதைத்தடுக்க கோயிலின் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள்
பொருத்தப்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட்டன. சமயபுரம் காவல் ஆய்வாளர் ஞானவேலன் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com