மணல் லாரிகளை சிறைபிடித்து கம்யூ. கட்சியினர் போராட்டம்

திருச்சி மாவட்டம் முசிறி அருகே மணல் லாரிகளை சிறைபிடித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே மணல் லாரிகளை சிறைபிடித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முசிறி - துறையூர் சாலையில் ஜெம்புநாதபுரத்தில் மணல் லாரிகள் காத்திருப்பு நிலையத்தில் சுமார் 3,000க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இதே சாலையில் சொரியம்பட்டியில் வெள்ளிக்கிழமை புதிதாக மணல் லாரிகள் காத்திருப்பு நிலையம் அமைக்கப்பட்டு அங்கு 2,000க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்த இரண்டு மணல் லாரிகள் காத்திருப்பு நிலையம் அமைக்கப்படுவதால் இப்பகுதியில் விபத்துகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும், மேலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரி ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்கள் தங்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் இல்லாததால் அருகில் உள்ள விவசாய நிலப்பகுதிக்கு சென்று தங்களது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். ஆகவே, சாலை விபத்துகள் மற்றும் பல்வேறு பிரச்னைகளை தீர்க்கும் வகையில் பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு, மணல் லாரிகள் காத்திருப்பு நிலையத்தை காவிரி ஆற்றில் மணல் எடுக்கப்படும் பகுதியில் உள்ள படுகைகளில் லாரிகளை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முசிறி ஒன்றிய செயலாளர் நல்லுசாமி தலைமையில் 50 க்கும் மேற்பட்டோர் சொரியம்பட்டியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மணல் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த முசிறி மற்றும் ஜெம்புநாதபுரம் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து பேராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com