இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம்: தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் 17-ஆவது மாநில மாநாடு திருச்சி புனித வளனார் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டை தலைமை பொதுச்செயலாளரும், மாநாட்டின் தலைவருமான செ. முத்துசாமி தொடங்கி வைத்தார். மாநாட்டு மலரை முன்னாள் அமைச்சர் ந. நல்லுசாமி வெளியிட தொட்டியம் கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் தலைவர் பி.எஸ்.கே. பெரியசாமி, ஊத்தங்கரை வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் தலைவர் வே. சந்திரசேகரன், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி என். சிவா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
 மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து செ. முத்துசாமி கூறியது:
இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை சரிசெய்ய வேண்டும். பதவி உயர்வுக்கு 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். அனைத்துப் பள்ளிகளுக்கும் இரவுக்காவலர்கள், துப்புரவுப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். தன்னாட்சி பெற்ற கல்வி வாரியம் அமைத்திட வேண்டும். உடற்கல்வி, கணினி, கலைப்பிரிவில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 40 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இத்தீர்மானங்கள் கல்வித்துறை அமைச்சரிடம் விரைவில் வழங்குவோம். அரசு பணியில் உள்ளோரின் வாரிசுகள் அரசு பள்ளியில்தான் படிக்க வேண்டும் என்பதை அரசு கட்டாயமாக்கினால் வரவேற்போம் என்றார் அவர்.
இதில் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, தமிழ்நாடு தலைமை செயலக சங்கத்தின் தலைவர் ஜெ. கணேசன், மாநில, மாவட்ட அளவிலான நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com