ஜூலை 28-ஆம் தேதி முதல் திருச்சியிலிருந்து திருப்பதி, கோவை, பெங்களூருக்கு புதிய விமான சேவை

திருச்சியிலிருந்து கோவை, பெங்களூருவுக்கு வாயுஜெட் என்ற புதிய விமான சேவை ஜூலை 28 முதல் தொடங்கப்பட உள்ளது.

திருச்சியிலிருந்து கோவை, பெங்களூருவுக்கு வாயுஜெட் என்ற புதிய விமான சேவை ஜூலை 28 முதல் தொடங்கப்பட உள்ளது.
திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு தமிழகம் மற்றும் தென்னிந்தியா முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று வரும் வகையில் தமிழக சுற்றுலாத் துறையுடன் இணைந்து புதிய விமான சேவை, ஹெலிகாப்டர் சேவையை தொடங்குகிறது வாயுபுத்ரா ஏர்வேஸ் நிறுவனம். வாயுஜெட் என்ற பெயரில் முதல் முறையாக ஹெலிகாப்டர் சேவை, சிறியரக விமான சேவை மற்றும் வழக்கமான விமான சேவைகளையும் தொடங்க திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம்.
இது குறித்து அந்நிறுவனத்தின் தொழில் நுட்ப இயக்குநர் கே. முருகப்பெருமாள் கூறியது: திருச்சியில் முதல் முறையாக ஹெலிகாப்டர் சேவையையும் சிறிய ரக விமானப் போக்குவரத்தையும் வாயுஜெட் நிறுவனம் தொடங்குகிறது. முதல் கட்டமாக திருச்சியிலிருந்து திருப்பதி, கோவை, பெங்களூர் ஆகிய மூன்று நகரங்களையும் இணைக்கும் வகையில் சிறியரக விமானம், ஹெலிகாப்டர் போக்குவரத்தும் ஜூலை 28ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. அதன் பின்னர் தென்னிந்திய பகுதியில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையில் போக்குவரத்து மேம்படுத்தப்படும். வாயுதூத் ஜெட் விமானம் மற்றும் ஹெலிகாப்டருக்கு குறைந்து வகை(பட்ஜெட் ஏர்லைன்ஸ்) கட்டணங்களே நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதாவது, 90 முதல் 45 நாள்களுக்குள் பயண டிக்கெட்டுகளை பதிவு செய்வதற்கு ஒரு கட்டணம், 45 முதல் 15 நாள்களுக்குள் பதிவு செய்வோருக்கு ஒரு கட்டணம், 15 நாளிலிருந்து விமானம் புறப்படும் 45 நிமிடங்களுக்கு முன்பு வரை ஒரு கட்டணம் என வெவ்வேறு பிரிவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த சேவை, வார நாள்களில் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடைபெறுகிறது என்றார்.
அட்டவணை: ஜூலை 28ஆம் தேதி:
புறப்படும் இடம்   நேரம்        சேருமிடம்   சேரும் நேரம்
திருப்பதி    காலை 9.00    மதுரை காலை  9.47
மதுரை    இரவு 10.30    திருச்சி இரவு 10.50
திருச்சி     இரவு 11.45     திருப்பதி     இரவு 12.25
ஜூலை 29:
திருப்பதி    காலை 9.00    திருச்சி காலை 9.38
திருச்சி    இரவு 10.30    கோவை    இரவு 10.58
கோவை     இரவு  11.45    திருப்பதி    இரவு 12.30
ஜூலை 30:
திருப்பதி    காலை 9.00    கோவை    காலை 9.45
கோவை    இரவு 10.30     திருப்பதி     இரவு  11.23
ஹெலிகாப்டர் சேவை: ஹெலிகாப்டர் சேவைகள் வாரத்தில் தலா மூன்று நாள்கள் ஒரு பகுதியிலிருந்து சுற்றுலா தலங்களுக்கு சென்று வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலாவதாக ஜூலை 28ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையில் மதுரையிலிருந்தும், ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் 6 -ஆம் தேதி வரை திருச்சியிலிருந்தும், ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை தஞ்சையிலிருந்தும், ஆகஸ்ட் 18 முதல் 20 வரை புதுச்சேரியிலிருந்தும், ஆகஸ்ட் 25-ஆம் தேதி கோவையிலிருந்தும் தினசரி தலா 4 டிரிப்புகள் வீதம் சேவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளன. பயணிகளின் வருகைக்கு ஏற்ப போக்குவரத்து மேம்படுத்தப்படும். மேலும், ஆகஸ்ட் 3ஆவது வாரத்திலிருந்து வழக்கமான விமான போக்குவரத்தும் தொடங்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com