எடை விதிமீறல் புகார் தெரிவிக்க "மொபைல் ஆப்'

வாங்கும் பொருள்களின் எடை முறைகேடுகள் மற்றும் பொட்டல பொருள்கள் குறித்த புகார்கள் ஆகியவற்றை, மொபைல் போன் ஆப் மூலம் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கு. இராசாமணி தெரிவித்துள்ளார்.

வாங்கும் பொருள்களின் எடை முறைகேடுகள் மற்றும் பொட்டல பொருள்கள் குறித்த புகார்கள் ஆகியவற்றை, மொபைல் போன் ஆப் மூலம் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கு. இராசாமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:தமிழ்நாடு சட்டமுறை எடையளவுச் சட்டம் 2009, மற்றும் பொட்டலப்பொருள்கள் விதிகள் 2011-இன் கீழ் முத்திரையிடப்படாத மற்றும் தரமற்ற எடையளவைகளை பயன்படுத்துதல், உள்ளிட்ட அனைத்து வகையான புகார்களுக்கும் தீர்வு காணும் வகையில் பிரத்யேக செல்லிடப்பேசி அப்ளிகேஷன் வெளியிடப்பட்டுள்ளது.  தமிழ்நாடு அரசு, தொழிலாளர் துறையின் மூலம் கொண்டுவரப்பரட்ட இந்த அப்ளிகேஷனை
அறிதிறன் செல்லிடப்பேசி மூலம் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் குறிப்பிட்ட புகார்கள் குறித்து அந்த ஆப் மூலம் தகவல் தெரிவிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அவற்றின் மூலம் பொதுமக்கள் தங்களின் புகார்களை பதிவு செய்து பயன்பெறலாம். இந்த செல்லிடப்பேசி அப்ளிகேஷனில் புகார் தொடர்பான காணொலி, புகைப்படம் மற்றும் குரல் பதிவு உள்ளிட்டவற்றை பதிவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com