தண்டவாள பராமரிப்பு பணி: ஈரோடு, திண்டுக்கல் மார்க்கத்தில்ரயில் போக்குவரத்தில் மாற்றம்

தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக ஈரோடு, திண்டுக்கல் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்தில் தாற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக ஈரோடு, திண்டுக்கல் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்தில் தாற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பது: திருச்சி-ஈரோடு மார்க்கத்தில் தண்டவாள இணைப்பு மற்றும் பொறியியல் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் தாற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி செவ்வாய்க்கிழமை (ஜூன் 20-ம் தேதி) திருச்சியிலிருந்து ஈரோடு செல்லும் பயணிகள் ரயில் (எண்.56841) கரூர் வரையில் மட்டுமே இயக்கப்படும்.
மேலும், பாலக்காட்டிலிருந்து திருச்சி வரும் பயணிகள் ரயில் (எண். 56712), மற்றும் ஈரோட்டிலிருந்து திருச்சி வரும் பயணிகள் ரயில் (எண். 56844) செவ்வாய்க்கிழமை மட்டும் ஈரோட்டிலிருந்து சேலம், கரூர் வழியாக திருச்சியை வந்தடையும்.
திண்டுக்கல் மார்க்கம்:  இதேபோல திருச்சி - திண்டுக்கல் மார்க்கத்தில் பூங்குடி மற்றும் குளத்தூர் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், குருவாயூரிலிருந்து சென்னை செல்லும் குருவாயூர் விரைவு ரயில் (எண். 16128) ஜூன் 21-ஆம் தேதி (புதன்கிழமை) குளத்தூர் பகுதியில் சில நிமிஷங்கள் நின்று செல்லும். இதனால் திருச்சியை அந்த ரயில் 10 நிமிஷங்கள் தாமதமாக கடந்து செல்லும்.நெல்லையிலிருந்து மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரயில், ஜூன் 26-ஆம் தேதி (எண். 56822) திண்டுக்கல்லில் இருந்து 30 நிமிஷங்கள் தாமதமாக புறப்படும். இதனால், சுமார் 1 மணி நேரம் தாமதமாக பகல் 2.45-க்கு திருச்சியை ரயில் கடந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com