5 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க இலக்கு: ஏபிவிபி

தமிழகத்தில் 5 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக என அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) மாணவர் அமைப்பினர் தெரிவித்தனர்.

தமிழகத்தில் 5 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக என அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) மாணவர் அமைப்பினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) - இன் மாநில செயலாளர் என். காளீஸ்வரன் திருச்சியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது: நாடு முழுவதும் 30 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டுள்ள ஏபிவிபி மாணவர் அமைப்பு, சமூகப் பிரச்னைகளுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. நிகழாண்டில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் விதமாக, தமிழகத்தில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் என 5 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் ஜூன் 27- ஆம் தேதி முதல் ஜூலை 31- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக மாவட்ட வாரியாக குழுக்களை நியமித்துள்ளோம்.
நீட் தேர்வுக்கு பயிற்சி...: ஏபிவிபி சார்பில் ஆகஸ்ட் மாதத்தில் கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு நீட் தேர்வு பயிற்சியளிக்க உள்ளோம். இதற்காக மாணவர்கள் குழுவையும் உருவாக்கியுள்ளோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com