2018இல் ஜிஎஸ்டிக்கு எதிராக போராட்டங்கள்: வெள்ளையன்

ஜிஎஸ்டியை எதிர்த்து 2018ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து போராட்டங்கள் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநிலத் தலைவர் வெள்ளையன் தெரிவித்தார்.

ஜிஎஸ்டியை எதிர்த்து 2018ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து போராட்டங்கள் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநிலத் தலைவர் வெள்ளையன் தெரிவித்தார்.
திருச்சி காட்டூரில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் ஜிஎஸ்டி குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது: நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு எனக்கூறி ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனங்களைப் போல ஒரே இடத்தில் இருந்து கொண்டு உலகம் முழுவதும் இணையதளம் மூலம் வியாபாரம் மேற்கொள்வோருக்கு இந்த வரி பொருந்தும். ஆனால், இந்தியாவில் உள்ள சிறு வணிகர்களுக்கு இந்த வரி விதிப்பு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இது இந்திய வணிகர்களுக்கு ஏற்புடையது அல்ல. மக்களும் வணிகர்களும் இரு தண்டவாளங்கள் போன்று, இதில் ஒன்று பழுதானாலும் அரசு நிர்வாகம் இயங்குவது சிரமம். ஜிஎஸ்டி குறித்து அனைத்துப் பகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி வருகிறோம். டிசம்பரில் மாநில கூட்டம் நடத்தப்படும். பின்னர் 2018-ஆம் ஆண்டு தொடக்கம் முதலே ஜிஎஸ்டி-க்கு எதிரான போராட்டங்கள் நடைபெறும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com