இலவச மோட்டார் சைக்கிள் திட்டம்: மாற்றுத்திறனாளிகள் தேர்வு முகாம்

மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசின் சார்பில், இணைப்புச் சக்கரங்களுடன் கூடிய இலவச மோட்டார் சைக்கிள் வழங்கும் திட்டத்திற்கான பயனாளிகளை தேர்வு முகாம் திருச்சியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசின் சார்பில், இணைப்புச் சக்கரங்களுடன் கூடிய இலவச மோட்டார் சைக்கிள் வழங்கும் திட்டத்திற்கான பயனாளிகளை தேர்வு முகாம் திருச்சியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இரு கால்களும் ஊனமுற்ற தனியார் ஊழியர்கள், மாணவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இணைப்பு சக்கரங்களுடன் கூடிய இலவச மோட்டார் சைக்கிள வழங்கும் திட்டத்தில், விடுபட்ட அனைவருக்கும் மோட்டார் சைக்கிள் பெற்றுத்தரும் வகையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதுவரையில் 400-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளன. இவற்றில் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்வதற்காக ஆட்சியர் கு. ராசாமணி தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர், அரசு மருத்துவர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். இக் குழுவினர் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்யும் வகையில் சிறப்பு முகாமை வெள்ளி, சனிக்கிழமைகளில் நடத்துகின்றன.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல்நாள் முகாமில் பயனாளிகள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனையும், வாகன ஓட்ட தகுதியுடையவரா என்பதை பரிசோதிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.இந்த முகாமில் பங்கேற்க 150-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். முகாமை தொடக்கி வைத்தார்.
திருச்சி மாவட்ட மாற்றுத்தினாளிகள் நல அலுவலர் என். சுவாமிநாதன், மோட்டார் வாகன ஆய்வாளர் பி. சித்ரா, மூளை நரம்பியல் நிபுணர் ஏ. வேணி, எலும்பியல் நிபுணர் எம். செல்வமுத்துக்குமார் ஆகியோர் பயனாளிகளை பரிசோதனை செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com