தூய்மை நகரமான திருச்சியை பின்பற்ற தயாராகும் 14 மாநகராட்சிகள்

மத்திய அரசின் தூய்மை நகரங்களின் பட்டியலில் தொடர்ச்சியாக 6ஆவது இடத்தில் இருந்து வரும் திருச்சி மாநகராட்சியில் செயல்படுத்தும் மின்னணு கற்றல், திடக்கழிவு மேலாண்மை,

மத்திய அரசின் தூய்மை நகரங்களின் பட்டியலில் தொடர்ச்சியாக 6ஆவது இடத்தில் இருந்து வரும் திருச்சி மாநகராட்சியில் செயல்படுத்தும் மின்னணு கற்றல், திடக்கழிவு மேலாண்மை, சமுதாயக்கழிப்பிடம் திட்டங்களை 8 மாநிலங்களைத்தைச் சேர்ந்த 14 மாநகராட்சிகள் பின்பற்றவுள்ளன.
இதன்முன்னோட்டமாக 14 மாநகராட்சிகளைச் சேர்ந்த அலுவலர்களுக்கு திருச்சியில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்துள்ள திருச்சி மாநகராட்சியானது பிற மாநகராட்சிகளுக்கு முன்னோடியாக தாமே முன்வந்து சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தியது.
ரேடியோ அதிர்வெண் அடையாளப்படுத்துதல்: திருச்சி மாநகராட்சியில் குப்பைகள் கையாளும் பணியை புதுமை முயற்சியாக ரேடியோ அதிர்வெண் அடையாளப்படுத்தும் (ஆர்எப்ஐடி) முறையை அறிமுகம் செய்தது. இதன் மூலம் குப்பைகள் சேகரிப்பு பணிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.
சமுதாய கழிப்பட பயன்பாடு: வேறு எந்த மாநகராட்சிகளிலும் இல்லாதவகையில் திருச்சி மாநகராட்சியில்தான் நகரப் பகுதியில் 476 குடிசைப்பகுதிகள் உள்ளன. இங்குள்ள ஆண்கள், பெண்கள், சிறுவர்களுக்கு தனித்தனியாகவும், ஒருங்கிணைந்தும் சுகாதார வளாகம் அமைத்து அவற்றை பராமரிக்க அந்தந்த பகுதியில் பொதுமக்கள் குழுவை அமைத்து கட்டணம் வசூல் செய்யும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகையில் 200-க்கும் மேற்பட்ட கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
மின்னணு கற்றல்: மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக மின்னணு கற்றல் முறையும் உள்ளது. இதில், இந்தியாவிலேயே திருச்சி மாநகராட்சி அதிகபட்சமாக 5,932 சான்றிதழ்களைபெற்று முன்னோடியாக உள்ளது. சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், இளநிலைப்பொறியாளர்கள், உதவிப்பொறியாளர்கள், உதவிசெயற்பொறியாளர்கள், ஆணையர் வரையில் 278 பேர் சிறப்பாக பணிபுரிந்து இந்த சான்றிதழ்களை பெற்றுள்ளனர்.
இதையடுத்து மத்திய அரசே 8 மாநிலங்களைச் சேர்ந்த 14 மாநகராட்சிகளை தேர்வு செய்து திருச்சியை பார்வையிட்டு அவற்றை செயல்படுத்த அறிவுறுத்தியுள்ளது.
இதன் முதல்கட்டமாக, பஞ்சாப், குஜராத், மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம், தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த 14 மாநகராட்சிகளைச் சேர்ந்த 34 அலுவலர்கள் திருச்சிக்கு வெள்ளிக்கிழமை வருகை தந்துள்ளனர். போபால், அகமதாபாத், மாஹே, மொகாலி, நாக்பூர், மைசூர், ராஜ்காட், சூரத், பிம்ப்ரி சின்ச்வாட், தெற்கு தில்லி, விஜயாவாடா, ஹைதராபாத், கோவை, தூத்துக்குடி ஆகிய 14 மாநகராட்சிகளின் பிரதிநிதிகளுக்கு ஒருநாள் சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்த சிறப்பு பயிற்சி வகுப்பை மாநகராட்சி ஆணையர் ந.ரவிச்சந்திரன் தொடக்கி வைத்தார். மாநகரப் பொறியாளர் எஸ். அமுதவள்ளி, செயற்பொறியாளர்கள் எஸ். கண்ணன், எஸ்.செல்வம், உதவிசெயற்பொறியாளர் எஸ்.ரகுராம், மருத்துவர் எம். அல்லி ஆகியோர், திருச்சி மாநகராட்சியின் சிறப்புத்திட்டங்கள்குறித்து விளக்கத்துடன் பயிற்சி அளித்தனர். தொடர்ந்து மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம், சமுதாய கழிப்பிடத் திட்டங்களை பார்வையிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com