ஸ்ரீரங்கத்தில் போலீஸார் வாகனச் சோதனை

வாகனச் சோதனையில் போக்குவரத்து போலீஸார் அத்துமீறுவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

வாகனச் சோதனையில் போக்குவரத்து போலீஸார் அத்துமீறுவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
திருவானைக்கா பகுதியில் நாள்தோறும் வாகனச் சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து போலீஸார் நெரிசலான பகுதியான ஸ்ரீரங்கம் திருப்பத்தில் நின்று கொண்டு இருசக்கர வாகனங்களைச் சோதனை செய்கின்றனர்.
இவர்கள் ஹெல்மெட், ஓட்டுநர் உரிமம் இருந்தாலும் ஏதோ காரணம் கூறி அபாராதத் தொகை வசூலித்தும், இருசக்கர வாகனங்களின் சாவியையும் பிடுங்கி வைத்துக் கொண்டும், வேகமாக வரும் இருசக்கர வாகனங்களை நிறுத்த அதன் சக்கரத்தில் லத்தியை திணிக்கும் செயல்களிலும் ஈடுபடுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
இதுகுறித்து வாகனச் சோதனை செய்யும் போலீஸார் கூறுகையில் நாள்தோறும் இத்தனை வழக்குகள் போட வேண்டும் என்று மேல் அதிகாரிகள் உத்தரவிடுவதால்தான் நாங்கள் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டியுள்ளது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com