கடைமடை வரை காவிரி செல்ல கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு

திருச்சி மாவட்டத்தில் உள்ள 17 கிளை வாய்க்கால்களிலும் கடைமடை வரை காவிரி தண்ணீர் சென்று சேருவதை கண்காணிக்க சிறப்பு குழுக்கள்

திருச்சி மாவட்டத்தில் உள்ள 17 கிளை வாய்க்கால்களிலும் கடைமடை வரை காவிரி தண்ணீர் சென்று சேருவதை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவர் அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்டத்தில் காவிரித் தண்ணீரை நம்பி பாசனவசதி பெறும் 17 கிளை வாய்க்கால்களில் கடைமடை வரைதண்ணீர் செல்வதை உறுதி செய்தல், வாய்க்கால்கள், ஏரிகள், குளங்கள் மற்றும் வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்பட்ட நிலவரம், மேற்கொள்ள வேண்டிய சீரமைப்புப் பணிகள், சட்ட விரோதமாகத் தண்ணீர் எடுப்பதை தடுத்தல் உள்ளிட்டவற்றை கண்காணிக்க மாவட்டம், கோட்டம் மற்றும் வட்ட அளவில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்குழுவில், வருவாய், பொதுப்பணி, வேளாண்மை, காவல்துறை ஆகிய  துறை அதிகாரிகள் ,விவசாய சங்கப் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர்.
இக்குழுவினர், காவிரி தண்ணீர் முறையாக அனைத்து பகுதிகளுக்கும் பாசனத்துக்கு செல்கிறதா என்பதை கண்காணித்து, விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்கவும், தேவையெனில் மாவட்டநிர்வாகத்துக்குப் பரிந்துரைப்பர் என்றார் ஆட்சியர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com