வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் அமைப்பைக் கண்டித்து, திருச்சியில் புதன்கிழமை வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தில்

நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் அமைப்பைக் கண்டித்து, திருச்சியில் புதன்கிழமை வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், நவம்பர் மாத இறுதியில் தில்லியில் பேரணி நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.
   இது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்க கூட்டுக்குழு செயலாளர் எம்.ஆர்.ஆர் சிவசுப்பிரமணியன் திருச்சியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது :
     கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வரும் அக். 9 ஆம் தேதியுடன் பணிஓய்வு பெற உள்ளார். அவருக்கு அடுத்த நிலையில் மூத்த நீதிபதியாக 2 ஆம் இடத்தில் உள்ள ஜெயந்த் படேல், தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றிருக்க வேண்டும். ஆனால் நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் அமைப்பு அவரை அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக அல்லாமல் 3 ஆவது நீதிபதியாக நியமனம் செய்தது. இதையடுத்து, ஜெயந்த் படேல் கடந்த வாரம் தனது பதவியை ராஜிநாமா செய்து, அதன் கடிதத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளார்.
இதைக்கண்டித்து நாடு முழுவதும் வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்க கூட்டுக்குழு சார்பில் அக். 4  புதன்கிழமை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் சுமார் 1,500 வழக்குரைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே ஜெயந்த்படேலை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் நவம்பர் மாத இறுதியில், தில்லியில் கண்டனப் பேரணி நடத்தப்படும் என்றார் அவர். இதேபோல், துறையூர் வழக்குரைஞர்கள் சங்க தலைவர் எஸ். தென்னரசு தலைமையில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. துணைத் தலைவர் ஜி. விவேக்ராஜா, செயலர் கே.செல்லதுரை, பொருளர் எஸ். பி.பாஸ்கர் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் , வழக்குரைஞர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com