சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா செப்.21இல் தொடக்கம்

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் நவராத்திரி திருவிழா செப்டம்பர் 21ஆம் தேதி தொடங்குகிறது.

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் நவராத்திரி திருவிழா செப்டம்பர் 21ஆம் தேதி தொடங்குகிறது.
செப்டம்பர்  30 ஆம் தேதி வரை நடைபெறஉள்ள விழாவில்  செப்டம்பர் 29 ஆம் தேதி சரஸ்வதி பூஜையும், 30ஆம் தேதி விஜயதசமியன்று  வெள்ளிக்குதிரை வாகனத்தில் அம்பாள் புறப்பாடாகி வன்னிமரம் அடைந்துஅம்பு போடுதல் நிகழ்ச்சியும் நடைபெறஉள்ளது.
மேலும்,  தினமும் மாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும், மாலை 6 மணிக்கு புறப்பாடும், அதைத் தொடர்ந்து  திருக்கோயில் மேற்கு பிரகார நவராத்திரி மண்டபத்தில் காட்சியளித்தலும் நடைபெற உள்ளது.
குமாரிகா, திருமூர்த்தி,  கல்யாணி, ரோகினி, காளகா, சண்டிகா, சாம்பவி, துர்கா,சரஸ்வதி, ஸீபத்ரா, வேடுபரி அலங்காரம் என ஒவ்வொருநாளும் ஒவ்வொரு அம்சத்திலும் மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். விழா ஏற்பாடுகளை திருக்கோயில் இணை ஆணையர் சி. குமரதுரை மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com