சம்பா சாகுபடிக்குத் தண்ணீர் திறக்கக் கோரி தரையில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம்

சம்பா சாகுபடிக்கு உடனடியாக தண்ணீர் திறக்க வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள்

சம்பா சாகுபடிக்கு உடனடியாக தண்ணீர் திறக்க வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தின் போது, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் ஆட்சியர் கு.ராசாமணியிடம் சங்கத்தின் தலைவர் பூ.விசுவநாதன் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கை மனுவை அளித்தனர். அதைத் தொடர்ந்து ஆட்சியரக வளாகத்தில் பொதுமக்கள் மனுக்கள் எழுதும் பகுதிக்கு வந்த விவசாயிகள்,  தரையில் அமர்ந்து கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் விசுவநாதன் கூறியது: கடந்தாண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79 அடியாக இருந்தது. ஆனால்,  கடைமடைப் பகுதி வரை தண்ணீர் முழுமையாகச் சென்றடையாத நிலையில் பயிர்கள் கருகின. நிகழாண்டில் சம்பா சாகுபடியை விவசாயிகள் தொடங்கும் நேரத்தில், தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 77.24 கன அடியாக உள்ளது. ஆனால் இதுவரை மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பதற்கான நடவடிக்கையை மாநில அரசு கவனத்தில் கொள்ளாமலேயே உள்ளது. இந்த நிலைத்தொடர்ந்தால் கடந்தாண்டு போலவே பயிர்கள் கருகும் நிலை ஏற்படும்.
எனவே, கர்நாடகத்திடமிருந்து உரிய தண்ணீரைப் பெற்று, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்றார் பூ. விசுவநாதன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com