பழுதடைந்த பள்ளிக் கட்டடத்தை சீரமைக்க வேண்டும்: 1- ஆம் வகுப்பு மாணவி ஆட்சியரிடம் கோரிக்கை

திருச்சி மாவட்டம், பெரியஆலம்பட்டிபுதூரில் பழுதடைந்துள்ள ஊராட்சி  ஒன்றியத்தொடக்கப் பள்ளிக் கட்டடத்தை  சீரமைத்துத் தரக் கோரி,  அப்பள்ளியில்

திருச்சி மாவட்டம், பெரியஆலம்பட்டிபுதூரில் பழுதடைந்துள்ள ஊராட்சி  ஒன்றியத்தொடக்கப் பள்ளிக் கட்டடத்தை  சீரமைத்துத் தரக் கோரி,  அப்பள்ளியில் படிக்கும் 1 ஆம் வகுப்பு மாணவி ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
ஸ்ரீரங்கம் வட்டம், பெரிய ஆலம்பட்டிபுதூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 1 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ரா. சாமு,  தனது தந்தை ராமச்சந்திரன் உள்ளிட்டோருடன் வந்து  ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பது:
பெரிய ஆலம்பட்டிபுதூர் தொடக்கப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். 1 ஆம் வகுப்பில் 14 மாணவர்களும், 13 மாணவிகளும் பயின்று வருகிறோம்.  பள்ளியின் மேற்கூரை பழுதடைந்த நிலையில் உள்ளது.   தொடர்ந்து மழைபெய்தால் மழைநீர் வகுப்பறைக்குள் புகும் நிலை உள்ளது. மேலும்  பள்ளியில் புத்தகங்களை வைத்து படிக்கவோ, எழுதவோ இயலாத நிலை உள்ளது.  இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் எடுத்துரைத்தும் நடவடிக்கை இல்லை. எனவே,  பெரும் அசம்பாவிதங்கள் நிகழும் முன்பு பள்ளிக் கட்டடத்தை சீரமைத்துத் தர வேண்டும் என்று மாணவி கூறியுள்ளார்.
தவறான அறுவைச் சிகிச்சை செய்ததாக புகார் :  
மணிகண்டம் கண்.தீனதயாளன் நகரைச் சேர்ந்த விதவை பெண்  அகிலா அளித்த மனு: கர்ப்பப்பை கோளாறு காரணமாக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 2017, ஜூலை மாதத்தில் பல்வேறு நிலைகளில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆகஸ்ட்  26 ஆம் தேதி  எனக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.  அப்போது சிறுநீர் குழாயுடன்,  மென்சஸ் குழாயையும் சேர்த்து இணைத்துவிட்டதால் தொடர்ந்து சிறுநீர் வந்து கொண்டே இருக்கிறது.
தவறான அறுவைச் சிகிச்சையைசெய்த நிலையில், இதுகுறித்து அரசு மருத்துவமனையில் கேட்ட போது,மீண்டும் மருத்துவமனையில் சேருமாறு கூறினார்கள். ஆனால்,  மருத்துவமனையில் மீண்டும் சேர்ந்து இருந்த நாள்களில் ஒருவர் கூட  சிகிச்சையளிக்கவில்லை. எனவே தவறான அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் மனுவில் கூறியுள்ளார்.
மீண்டும் பணி வழங்கக் கோரி மனு :  லால்குடி வட்டம், புள்ளம்பாடி ஒன்றியம், கருடமங்கலத்தைச்சேர்ந்த சூரியபிரகாஷ் உள்ளிட்டோர் அளித்த மனு: புள்ளம்பாடி ஒன்றியப்  பகுதிகளில் கடந்த ஓராண்டுகாலமாக டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், டெங்குகொசுக்களை அழிக்கும் பணியை   10 க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்த நிலையில், திடீரென பணியிலிருந்துஎங்களை நீக்கியுள்ளனர். நீக்கத்துக்கு காரணம் தெரிவிக்கவில்லை.   மாற்று வேலைக்கும் செல்ல இயலாத நிலை உள்ளது. எனவே குடும்ப வாழ்வாதார நிலைக் கருதி மீண்டும் பணி வாய்ப்பை வழங்க வேண்டும் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com