தமிழகத்தில் நடைபெறுவது பா.ஜ.க. ஆட்சிதான்: திருச்சியில் சீமான் பேட்டி

தமிழகத்தில் நடைபெறுவது பா.ஜ.க. ஆட்சிதான், எனவேதான் இந்த ஆட்சி முற்றுப்பெறாமல் உள்ளது என்றார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் திரைப்பட இயக்குநருமான சீமான்.

தமிழகத்தில் நடைபெறுவது பா.ஜ.க. ஆட்சிதான், எனவேதான் இந்த ஆட்சி முற்றுப்பெறாமல் உள்ளது என்றார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் திரைப்பட இயக்குநருமான சீமான்.
திருச்சியில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க புதன்கிழமை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீரை பெற்றுத்தர, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். ஆனால் மத்தியில் ஆண்டு வரும் பா.ஜ.க.  மேலாண்மை வாரியத்தை அமைக்காது  காலம் தாழ்த்தி வருகிறது.  தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சிதான் நடந்து வருகின்றது. எனவேதான் எப்போதோ முற்றுப்பெற்றிருக்க வேண்டிய ஆட்சி இன்னும் தொடர்கிறது.
மக்கள் சேவை செய்யாத சட்டப்பேரவை உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யலாம்.
ஆனால் தமிழகத்தில் அதிகாரத்தை பயன்படுத்தி 18 உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அப்படியானால் கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்கியிருந்தபோதே உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்திருக்கலாமே ? ஏன் அவ்வாறு செய்யவில்லை? என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com