நாத்திக மறுப்பு ஆத்திக மாநாடு தொடக்கம்

திருச்சியில் உலக நாத்திகர் மாநாடு நடைபெறும் நிலையில், நாத்திக மறுப்பு ஆத்திக மாநாடும் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த மாநாடும் 3 நாள் நடைபெறுகிறது.

திருச்சியில் உலக நாத்திகர் மாநாடு நடைபெறும் நிலையில், நாத்திக மறுப்பு ஆத்திக மாநாடும் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த மாநாடும் 3 நாள் நடைபெறுகிறது.
இம்மாநாட்டை முன்னின்று நடத்தும், உலக சமயங்களை ஒன்றிணைக்கும் தமிழ் ஆன்மவியல் அறக்கட்டளை நிறுவனர் மு. தெய்வநாயகம், செய்தியாளர்களிடம் கூறியது:
திராவிடர் கழகம் சார்பில் மாநாடுகள் நடைபெறுவது வழக்கம். அது பொதுவான நிலை. ஆனால், உலக நாத்திகர் மாநாடு என கடவுள் மறுப்பு கொள்கையை முன்னிலைப்படுத்தி சர்வதேச அளவில் அறிஞர்களை நடத்துகின்றனர். கடவுள் மறுப்பாக இருந்தாலும், கடவுள் ஏற்பாக இருந்தாலும் பகுத்தறிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். மனிதனின் ஆறாவது அறிவே அதற்காக உள்ளதுதான்.
கடவுள் இருக்கிறாரா என்பதை உணர்வுபூர்வமாக உணர்ந்தவர்களால் மட்டுமே அறிய முடியும். தமிழ் மொழியில்தான் வேறு எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு உள்ளது. இதர மொழிகளுக்கு எழுத்து, சொல், யாப்பு, அணி என 4 இலக்கணம் என்றால், தமிழுக்கு மட்டும்தான் கூடுதலாக பொருள் என்ற இலக்கணமும் உள்ளது. 
இத்தகைய சிறப்பு மிக்க இலக்கணத்திலும், இலக்கியங்களிலும், தமிழ் வரலாற்று நூல்களிலும் கடவுள் குறித்த பல்வேறு குறிப்புகள் உள்ளன. மேலும், கடவுளே தமிழ் சங்கங்களை நிறுவி செயல்பட்டதையும் குறிப்பிடுகிறது. ஆன்மிகம் என்பது மதநம்பிக்கை, மூடநம்பிக்கை சார்ந்ததாக இருத்தல் கூடாது, உணர்வுப் பூர்வமாக, அனுபவப் பூர்வமாக இருக்க வேண்டும் என்பதை தமிழ் நூல்கள் எடுத்து விளக்குகின்றன.
எனவே, நாத்திகர்களுக்கு அவற்றை விளக்க வேண்டிய கடமை தமிழ் படித்த அறிஞர்களுக்கு உள்ளது. உலக நாத்திகர் மாநாடு நடத்தும் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்களுக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதி, விவாதிக்கத் தயாராக இருப்பதாக அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்காக நாத்திக மறுப்பு ஆத்திக மாநாட்டை ஜனவரி 5,  6,  7 ஆகிய தேதிகளில் திருச்சியில் நடத்தி வருகிறோம். அனைத்துத் தரப்பினரும் வந்து உரிய விளக்கம் பெற்றுச் செல்லலாம் என்றார். 
இதற்கான ஏற்பாடுகளை, மனித உரிமை அமைதி கவுன்சில் மாநில துணைத் தலைவர் எஸ்.யேசுதாஸ், வழக்குரைஞர் தமிழ் ராஜேந்திரன் ஆகியோர் ஒருங்கிணைத்துள்ளனர். இந்த மாநாடு ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com