பெண் குழந்தைகளை பாதுகாப்போம் திட்டத்துக்கு ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு

பெண் குழந்தைகளை பாதுகாப்போம் திட்டத்துக்காக திருச்சி மாவட்டத்துக்கு ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்திருப்பதாக ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்தார்.

பெண் குழந்தைகளை பாதுகாப்போம் திட்டத்துக்காக திருச்சி மாவட்டத்துக்கு ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்திருப்பதாக ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்தார்.
திருச்சி மாவட்ட சமூகநலத்துறைசார்பில், இத் திட்டம் தொடர்புடைய சிறப்பு செயலாக்கக் குழு கூட்டம் ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் கு.ராசாமணி பேசியது: மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் செயல்படுத்தப்படும் பெண் குழந்தைகளை பாதுகாப்போம், படிக்கவைப்போம் திட்டத்துக்காக திருச்சி மாவட்டத்துக்கு ரூ.50 லட்சம் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த மாவட்ட அளவில் செயலாக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் திட்டத்தின் வழிகாட்டுதல்களை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்துக்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். பெண் குழந்தைகளின் பிறப்பு, கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு குறித்த அனைத்து நடவடிக்கைகளையும் அந்தந்த துறைகள் மூலம் சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்றார்.
கூட்டத்தில், மாவட்ட சமூக நல அலுவலர் தமீமுன்னிசா, குடும்பநல துணை இயக்குநர் எலிசபெத்மேரி, மகளிர் திட்ட அலுவலர் பாபு, குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் புனவேஸ்வரி, ஆதிதிராவிடர் நல அலுவலர் சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com