தேசியக் கல்லூரி 99 -ஆவது ஆண்டு விழா

திருச்சி தேசியக் கல்லூரியின் 99 ஆவது ஆண்டு விழா  புதன்கிழமை நடைபெற்றது.

திருச்சி தேசியக் கல்லூரியின் 99 ஆவது ஆண்டு விழா  புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில்  கல்லூரி முதல்வர் இரா. சுந்தரராமன் ஆண்டறிக்கை  வாசித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற  தேசியத் தொழில்நுட்பக் கழகத்தின் (என்.ஐ.டி) இயக்குநர்  மினிஷாஜி தாமஸ்  மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கிப் பேசுகையில்,   நாட்டிற்கும் சமூகத்திற்கும் பயன்படும் வகையில் இக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. மாணவர்களின் நலனிலும் படிப்பிலும் அக்கறைகொண்டு செயலாற்றுவதுடன் நேர்மறைச் சிந்தனைகளைச் சமூகத்தில் விதைக்கிறது. 
இன்றைய மாணவர்கள்பொழுதுபோக்கில் காலத்தை மிகுதியாக கழிக்காமல், படிப்பில் ஆர்வத்தைச் செலுத்தவேண்டும் என்றார்.  கல்வி, விளையாட்டு, சமூகப்பணி உள்ளிட்டவற்றில் சாதனைகள் புரிந்த 350 மாணவ,  மாணவியருக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 
இதில், கல்லூரியின் செயலர் கா. ரகுநாதன், இயக்குநர் அன்பரசு,  துணைமுதல்வர்முனைவர் அகிலாஸ்ரீ, கல்லூரி நிர்வாகக் குழு துணைத் தலைவர் சக்கரபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com