சட்ட விரோதமாக நடக்கும் மதுபான விற்பனையை தடுக்க வலியுறுத்தல்

தொட்டியம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக நடைபெறும் மதுபான விற்பனையை தடுக்க

தொட்டியம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக நடைபெறும் மதுபான விற்பனையை தடுக்க போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தொட்டியம் காவல் எல்லைக்குள்பட்ட சீனிவாசநல்லூர், கள்ளுக்கடை பேருந்து நிறுத்தம்,  மதுரகாளியம்மன் கோயில் அருகே, சின்னவாய்க்கால் பாலம், கொளக்குடி அரசு மதுபானக் கடை  மற்றும் காட்டுப்புத்தூர் காவல் எல்லைக்குள்பட்ட சின்னபள்ளிப்பாளையம்,  உன்னியூர், முருங்கை, காட்டுப்புத்தூர், காடுவெட்டி ஆகிய பகுதிகளில் சட்ட விரோதமாக டாஸ்மாக் மதுபானக்  கடை பார்களில் சட்ட விரோதமாக மதுபானங்கள் காவல்துறை அதிகாரிகள் ஆதரவுடன் விற்பனை செய்யப்படுகிறது. 
இரவு வேளைகளில் மதுபானம் அருந்துவோர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதுடன், பொதுமக்களுக்கு அச்சத்தை  ஏற்படுத்தி வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது. 
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாலும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. 
இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சட்டவிரோதமாக செயல்படும் டாஸ்மாக் பார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com