சிறுபான்மையினர், வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு தனித்தனி அமைச்சகம்

தமிழகத்தில் சிறுபான்மையினர், வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு தனித்தனி அமைச்சகம் ஏற்படுத்த

தமிழகத்தில் சிறுபான்மையினர், வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு தனித்தனி அமைச்சகம் ஏற்படுத்த எஸ்பிடிஐ கட்சி மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
திருச்சி பொன்மலை ஜி கார்னரில் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி  மாநாடு ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது. மாநாட்டின் முதல் நிகழ்வாக நெருக்கடிக்குள்ளாகும் மதச்சார்பின்மையும், அரசியல் எழுச்சிக்கான தேவையும் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது தலைமை வகித்தார். 
திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கு.ராமகிருட்டிணன், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம். பாக்கர், மக்கள் கண்காணிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆசிர்வாதம், தமிழ் புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன், ஜமாத்தே இஸ்லாமிய ஆலோசனை குழு உறுப்பினர் ஜலாலுதீன், தமிழ் தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன், கிருஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிக்கோ இருதயராஜ், மே 17 இயக்கத்தின் அருள் முருகன், பாப்புலர் ஃப்ரண்ட்ஸ் ஆப் இந்தியா மாநில பொதுச்செயலாளர் காலித் முகமது, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநிலத் தலைவர் ஆபிருதீன் மன்பயி ஆகியோர் கருத்துரை வழங்கினர். முன்னதாக, மாநிலச் செயலாளர் ரத்தினம் வரவேற்றார். முடிவில், மாநிலச் செயலாளர் அபுபக்கர் சித்திக் நன்றி கூறினார். 
தொடர்ந்து, ஒடுக்கப்பட்ட பெண்களும், அரசியல் எழுச்சியும் என்ற தலைப்பில் மகளிர் கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விமன் இந்தியா மூமெண்ட் மாநில துணைத் தலைவர் பாத்திமா கனி தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் உம்முல் தௌலத்தியா வரவேற்றார். மாநிலத் தலைவர் நஜ்மா பேகம், செயற்குழு உறுப்பினர் நசரத் பேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து, பிற்பகலில் தந்தை பெரியார் அரங்கில் தொடங்கிய மாநாட்டுக்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தலைமை வகித்தார். 
விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை கொண்டுவர வேண்டும். தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவை மாற்றி வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர வேண்டும். தமிழகத்தில் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களுக்கு தனித்தனியாக அமைச்சகம் அமைக்க வேண்டும். விவசாயத்தை முன்னேற்றும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். அழிவுத் திட்டங்களிலிருந்து தமிழகத்தை பாதுகாக்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை உயர்த்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com