மாநில ஹாக்கி: திண்டுக்கல் ஜி.டி.என் அணி சாம்பியன்

மணப்பாறையில் நடைபெற்ற மாநில அளவிலான ஹாக்கிப் போட்டியில் திண்டுக்கல் ஜி.டி.என் அணி வெற்றி பெற்று

மணப்பாறையில் நடைபெற்ற மாநில அளவிலான ஹாக்கிப் போட்டியில் திண்டுக்கல் ஜி.டி.என் அணி வெற்றி பெற்று சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது.
மணப்பாறை ஹாக்கி அகாதெமி, தியாகேசர் ஆலை பள்ளி ஹாக்கி முன்னாள் மாணவர்கள் சார்பில் முதலாமாண்டு மாநில அளவிலான இரண்டு நாள் ஹாக்கிப் போட்டி சனிக்கிழமை துவங்கியது. 
இரண்டாம் நாளான, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் திண்டுக்கல் பாண்டியாஸ் அணியை பெனால்டி முறையில் 5க்கு 4 என்ற கோல் கணக்கில் திண்டுக்கல் ஜி.டி.என் அணி வெற்றி பெற்று சாம்பியன்ஷிப் கோப்பையையுடன் முதல் பரிசுத் தொகை ரூ.15 ஆயிரம் பெற்றது. இரண்டாம் பரிசு ரூ.10 ஆயிரம் திண்டுக்கல் பாண்டியாஸ் அணிக்கும், மூன்றாம் பரிசு ரூ.7 ஆயிரம் மதுரை திருநகர் அணிக்கும், நான்காம் பரிசு ரூ.5 ஆயிரம் மணப்பாறை மாஸ் ஹாக்கி கிளப் அணிக்கும் கிடைத்தது. பரிசுகளை தனிப்பயிற்சி கல்லூரி த.தங்கமணி வழங்கினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com