பெல் நிறுவனத்தில் ஆட்சிமொழி தினம்

திருச்சி பெல் நிறுவனத்தில் ஆட்சிமொழித் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

திருச்சி பெல் நிறுவனத்தில் ஆட்சிமொழித் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு பெல் கச்சாப் பொருள் மேலாண்மைத் துறைப் பொது மேலாளரும், ஆட்சிமொழி அமலாக்கக் குழுவின் உறுப்பினருமான டி. அசோகன் தலைமை வகித்து பேசுகையில், இந்தி மொழியை அலுவல் மொழியாகப் பரப்புவதன் வாயிலாக தன்னைச் சார்ந்துள்ளோருக்கும், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பாக சேவையாற்ற பெல் நிறுவனம் உறுதிபூண்டுள்ளது என்றார்.
மத்திய மண்டல அஞ்சல்துறைத் தலைவர் உம்பேஷ் அபிமன்யூ விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசியது:  பல்வேறு கலாசாரங்கள், மொழிகளைக் கொண்ட நம் நாட்டில் அனைத்துப் பகுதி மக்களிடையே  தடையில்லாத தொடர்பை மேம்படுத்த இணைப்பு மொழியாக அனைத்துத் தகுதியையும் இந்திமொழி கொண்டிருக்கிறது. தத்தமது தாய்மொழியுடன் பிராந்திய மொழியையும் கற்பது பிற மாநில மக்களுக்கு அவசியமானதாகும் என்றார். 
தொடர்ந்து  பெல் கிரண் மின்னிதழையும்  வெளியிட்ட அபிமன்யூ, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளையும் வழங்கினார். ஆட்சிமொழி அலுவலர் சுதீர்குமார் மிஸ்ரா ஆட்சிமொழி நடவடிக்கை ஆண்டறிக்கையை வாசித்தார்.மனிதவளம் மற்றும் மருத்துவத்துறைக்கானகூடுதல் பொது மேலாளர் ஏ.எஸ். சமது வாழ்த்திப் பேசினார்.
முன்னதாக, மனிதவளத்துறை முதுநிலைத் துணைப் பொது மேலாளர் கிருஷ்ணவேணி சேகர் வரவேற்றார். முதுநிலை அலுவலர் பிரபா சம்பத் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com