சந்தன மரம் கடத்தல்: துப்பாக்கியால் சுட்டு இளைஞர் கைது

சந்தன மரக் கடத்தலில் ஈடுபட்டு வந்த நபரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர்.

சந்தன மரக் கடத்தலில் ஈடுபட்டு வந்த நபரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர்.
பெங்களூரில் சந்தன மரங்களை வெட்டி கடத்தப்படுபவர்களைக் கைது செய்ய தனிப் படை போலீஸார் முயற்சி மேற்கொண்டனர். திங்கள்கிழமை இரவு சந்த மரக் கடத்தலில் தொடர்புடைய முஜாயிதிஹுல்லா, பெங்களூரு ஊரகம் சிக்பள்ளாபூரில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல்
கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீஸார், முஜாயிதிஹுல்லா மற்றும் அவரது கூட்டாளி இமாஜத்துல்லா ஆகியோரை கைது செய்து ஜீப்பில் பெங்களூரு கப்பன்பூங்கா காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தனராம். குயின்ஸ்சாலை அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் கிருஷ்ணமூர்த்தியை கீழே தள்ளிவிட்டு தப்பியோடினர். அவரை கப்பன்பூங்கா காவல் ஆய்வாளர் ஐயண்ண ரெட்டி, முஜாயிதிஹுல்லாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் காயமடைந்த முஜாயிதி ஹுல்லாவை போலீஸார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் பேரில் அவரது கூட்டாளிகள் லட்சுமண், ரங்கநாதன், ரங்கசாமி ஆகியோரை போலீஸார் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com