டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம்

சீர்காழியில் ஊராட்சிச் செயலர்கள், தங்கும்விடுதி மற்றும் திருமண மண்டப உரிமையாளர்களுக்கு டெங்கு,

சீர்காழியில் ஊராட்சிச் செயலர்கள், தங்கும்விடுதி மற்றும் திருமண மண்டப உரிமையாளர்களுக்கு டெங்கு, பன்றிக் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சார்பில், சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமுக்கு திருவெண்காடு வட்டார மருத்துவ அலுவலர் கனிமொழி தலைமை வகித்து பேசியது: திருமண மண்டபங்கள், தங்கும்விடுதிகள் மக்கள் அதிகம் வந்து செல்லும் இடமாக உள்ளதால் கட்டடங்கள் தரைகளை நாள்தோறும் கிருமிநாசினி ஸ்பிரேயர் கொண்டு 5 முறை சுத்தம் செய்யவேண்டும். தேவையற்ற பயன்படுத்திய பிளாஸ்டிக் டீ கப்கள், பாட்டில்கள் தேங்காதவாறு அப்புறப்படுத்த வேண்டும், ஊராட்சிகள்தோறும் குப்பைகள் தேங்காத வகையில் சுத்தம் செய்து பீளிசிங் பவுடர் தெளிக்கவேண்டும் என்றார்.
முகாமில், மண்டல அலுவலரும், ஆட்சியரின் நேர்முக உதவியாளருமான (சிறு சேமிப்பு) மனோகரன், சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஞானசெல்வி, ரெஜினாராணி( ஊராட்சிகள்) மருத்துவர்கள் சதாம்ஹூசைன், நிவேதிதா, சுகாதார ஆய்வாளர் ராஜாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com