வாக்களிக்க ஊக்குவிக்க வேண்டும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார்

வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் தெரிவித்தார்.

வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் தெரிவித்தார்.
பெங்களூரு ரேவா பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்து அவர் பேசியது: தேசிய அளவில் வாக்களிக்கும் உரிமையை நிலைநாட்டுவதனை ஒரு சிலர் மறந்துள்ளனர். பணம், பொருள்களை பெற்று வாக்களிக்கும் கலாசாரம் உருவாகி வருவது வேதனை அளிக்கிறது. 
கர்நாடகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது சுமார் ரூ. 200 கோடி மதிப்புள்ள சேலைகள், கைக்கடிகாரம் உள்ளிட்ட பொருள்கள், மது உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. நவீன காலத்தில் வாழ்ந்து வரும் நாம், நமது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதற்கு கையூட்டு பெறும் நிலையை மாற்ற வேண்டும். 
விலை மதிப்பற்ற வாக்குகளை யாரும் விற்பனை செய்யக் கூடாது. வரும் தேர்தல்களில் மக்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். அதற்கான விழிப்புணர்வை மேற்கொள்ள ரேவா பல்கலைக்கழகம் முன்வந்துள்ளதை வரவேற்கிறேன். ரேவா கல்லூரியின் வேந்தர் ஷியாம்ராஜு, சுமார் 800 மாணவர்களைக் கொண்டு பேட்டராயனபுரா சட்டப்பேரவைத் தொகுதியில் 100 சதம் வாக்குபதிவு நடைபெறும் வகையில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாக உறுதியளித்துள்ளார். 
அவரை போலவே அரசு, தனியார் கல்லூரிகளின் முதல்வர்கள் மாநிலத்தின் அனைத்து தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்குப்பதிவை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் ரேவா பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஷியாம்ராஜ், துணை வேந்தர் எஸ்.ஒய்.குல்கர்னி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com