பெங்களூரு பல்கலைக்கழகத்தின் கல்வி மையங்களைத் தொடங்க விண்ணப்பிக்க அழைப்பு

பெங்களூரு பல்கலைக்கழகத்தின் கல்வி மையங்களைத் தொடங்க நவம்பர் 30-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.

பெங்களூரு பல்கலைக்கழகத்தின் கல்வி மையங்களைத் தொடங்க நவம்பர் 30-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
இதுகுறித்து பெங்களூரு பல்கலைக்கழகத்தின் தொலைத்தூரக்கல்வி இயக்குநரக அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெங்களூரு பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்குநரகமானது 2018-19-ஆம் ஆண்டில் வழங்கும் இளநிலை, முதுநிலை, முதுநிலை பட்டயப் பயிற்சி, சான்றிதழ் படிப்புகளுக்கு பெங்களூரு மாநகரம்,  ஊரகம், கோலார், சிக்கபளாப்பூர், ராமநகரம் மாவட்டங்களில் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் அங்கீகாரம் பெற்றுள்ள அரசு,  தனியார் கல்லூரிகள் கல்வி மையம் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
கல்வி மையங்களை தொடங்க ஆர்வமாக உள்ள அரசு, தனியார் கல்வி நிறுவனங்கள் தங்கள் கல்லூரிகளில் கிடைக்கும் வசதிகள் உள்ளிட்ட விவரங்களுடன் ரூ.50 ஆயிரம் வங்கிவரைவோலையுடன் விண்ணப்பங்களை அளிக்கலாம். 
பெங்களூரு ஞானபாரதி வளாகத்தில் அமிஅந்துள்ள பெங்களூரு பல்கலைக்கழகத்தின் தொலைத்தூரக்கல்வி இயக்குநரகத்தில் நவ.20 முதல் 30-ஆம் தேதிவரையில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com