பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

பெங்களூரு பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பெங்களூரு பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து பெங்களூரு பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்வி இயக்குநரகம் அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெங்களூரு பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்குநரகத்தில் மதிப்பூதியத்துக்கு முழு நேரமும் பணியாற்ற இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  இதற்கான விண்ணப்பங்களை w‌w‌w.‌d​c​c​b‌u​b.‌i‌n, ‌w‌w‌w.​b​a‌n‌g​a‌l‌o‌r‌e‌u‌n‌i‌v‌e‌r‌s‌i‌t‌y.​ac என்ற இணையதளங்களில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பிஏ, பிகாம், பிபிஏ, கன்னடம், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், சமூகவியல், அரசியல் அறிவியல், வணிகம், கணிதம் போன்ற பாடப் பிரிவுகளில் பணியாற்றுவதற்கு தலா ஒரு இணை பேராசிரியர்,  2 உதவி பேராசிரியர்கள்தேவைப்படுகிறார்கள். 
அதேபோல, கணினி அறிவு, கன்னடம், ஆங்கிலம் தட்டச்சுக்கான இளநிலை அல்லது முதுநிலை பட்டம் படித்துள்ளவர்களிடம் இருந்த் 3 ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
இதற்கான விண்ணப்பங்களை தொலைதூரக்கல்வி இயக்குநரகம், பெங்களூரு பல்கலைக்கழகம், பெங்களூரு என்ற முகவரியில் நவம்பர் 30-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 080-22961261,22961262, 22961263, 22961264, 22961265, 22961266, 22961267 ஆகிய தொலைபேசி எண்களை அணுகலாம் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com