வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் புதிய பெயர்களைச் சேர்க்க மாநிலம் தழுவிய சிறப்பு முகாம் நடக்கவிருக்கிறது.

வாக்காளர் பட்டியலில் புதிய பெயர்களைச் சேர்க்க மாநிலம் தழுவிய சிறப்பு முகாம் நடக்கவிருக்கிறது.
இதுகுறித்து கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, வாக்காளர் பட்டியலை சீரமைப்புப் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், எந்த வாக்காளரும் விடுபட்டுவிடக் கூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையில், வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களைச் சேர்க்க சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. நவ.23 முதல் 25-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு நடக்கும் இந்த சிறப்பு முகாம், மாநிலம் முழுவதும் அமைந்துள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறும். 
இந்த வாய்ப்பை பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்தல் அதிகாரிகள் சிறப்பு முகாம்களை நடத்த வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளனர்.  மாநிலத்தின் எல்லா வாக்குச்சாவடிகளிலும் 2019-ஆம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டோர், நீக்கப்பட்டோர் பெயர் பட்டியலும்
தரப்பட்டுள்ளது. 
இந்த வாக்காளர் பட்டியலில் அவரவர் பெயர் இருக்கிறதா? என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம். பெயர்கள் விடுபட்டவர்கள், புதிய வாக்காளர்கள் உரிய படிவங்களில் விண்ணப்பித்து பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம். பெயர்களைச் சேர்க்க படிவம்-6, பெயர்களை நீக்க படிவம்-7, திருத்தம் செய்ய படிவம்-8, ஒரே சட்டப்பேரவைத் தொகுதிக்குள் வாக்குச்சாவடிகளை மட்டும் மாற்றிக்கொள்ள படிவம்-8ஏ ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். 
18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயரை சேர்த்துக் கொள்ளலாம். புதிதாக பெயர்களைச் சேர்த்துள்ள அனைவருக்கும் ஜன.1-ஆம் தேதிக்குள் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அட்டை வழங்கப்படும். 
இதன் நிறைவில், புகைப்படத்துடன்கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் 2019-ஆம் ஆண்டு ஜன.15-ஆம் தேதி வெளியிடப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு ‌w‌w‌w.​c‌e‌o‌k​a‌r‌n​a‌t​a‌k​a.‌k​a‌r.‌n‌i​c.‌i‌n  என்ற இணையதளத்தை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com