கோலார் தங்கவயலில் மான்கள் சரணாலயம் அமைக்க வலியுறுத்தல்

கோலார் தங்கவயலில் மான்கள்சரணாலயம் அமைக்க வலியுறுத்தல்

கோலார்தங்கவயலில் மான்கள் சரணாலயம் அமைக்க வேண்டும் என விலங்குககள் மீட்பு சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோலார் தங்கவயலில் உள்ள பாரத தங்கச் சுரங்க நிறுவனத்துக்குச் சொந்தமான பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் புல்வாய்( ஆப்ஹஸ்ரீந் ஆன்ஸ்ரீந்)என அழைக்கப்படும் அரியவகை மான்கள் ஏராளமாக உள்ளன. தன்னிச்சையாக சுற்றித் திரியும் இந்த மான்கள், சாலைகளைக் கடக்கும்போது வாகனங்களில் சிக்கி அடிபட்டும், குடியிருப்பு பகுதிகளில் உள்ள தெருநாய்களால் கடித்து குதறப்பட்டும் உயிரிழக்கின்றன. 
கிருஷ்ணாவரம், பாலகாடு. பிஇஎம்எல் நகர்  பகுதிகளில் தெருநாய்களிடம் சிக்கி கடிபட்டு காயம் அடைந்த சில மான்களை குளோபல் விலங்குகள் மீட்பு சங்கத்தினர்  மீட்டுள்ளனர். இவற்றில் பல மான்கள் கால்நடை மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் பிழைத்தாலும், பல மான்கள் உயிரிழக்க நேர்ந்துள்ளது.
இதுகுறித்து விலங்கின மீட்பு சங்கத் தலைவர் அனிமல் முரளி கூறுகையில், "பாதுகாப்பற்ற சுழ்நிலையில் தொடர்ந்து அரிய வகை மான்கள் உயிரிழந்து வருகின்றன. இந்த அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்க கோலார் தங்கவயலில் மான்கள் சரணாலயம் அமைக்க அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. அரசு அனுமதி அளித்தால், மான்களைப் பாதுகாக்க பூங்காவைச் சுற்றி எங்கள் செலவிலே  வேலி அமைப்போம்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com