எடியூரப்பாவின் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

மஜத, காங்கிரஸ் கட்சியினரின் போராட்டத்தைத் தொடர்ந்து,பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பாவின் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மஜத, காங்கிரஸ் கட்சியினரின் போராட்டத்தைத் தொடர்ந்து,பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பாவின் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டுவரும் பாஜகவுக்கு எதிராக மக்கள் கலகம் செய்ய வேண்டும் என்று முதல்வர் குமாரசாமி அழைப்பு விடுத்திருந்த பின்னணியில், பெங்களூரு டாலர்ஸ் காலனியில் உள்ள பாஜக மாநிலத் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடியூரப்பாவின் வீட்டுக்கு முன்பாக வியாழக்கிழமை மஜத, காங்கிரஸ் கட்சியின் போராட்டம் நடத்தினர். 
இந்த போராட்டத்தின்போது மஜத-காங்கிரஸ் மற்றும் பாஜகவினருக்கு இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டு, பதற்றமான சூழல் உருவானது. இந்த சம்பவம் குறித்து ஆளுநர், டிஜிபி ஆகியோரிடம் பாஜக புகார் அளித்துள்ளது.
இந்நிலையில், பெங்களூரு, டாலர்ஸ் காலனியில் உள்ள எடியூரப்பாவின் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
கர்நாடகமாநில ஆயுதப்படை போலீஸாரும் நிறுத்தப்பட்டுள்ளன. எடியூரப்பாவின் வீடு, அவரது வீட்டின் சாலை முகப்பில் தடுப்பு போடப்பட்டு, சோதனை நடத்தப்படுகிறது. 
எடியூரப்பாவைக் காண வருவோரின் கார்கள் சாலையின் முகப்பிலே நிறுத்தப்படுகிறது. எவ்வித அசம்பாவிதங்களும் நடக்காமல் தடுக்கவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com