மாநில அறிவியல் கண்காட்சி போட்டி

மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டியை நடத்த கர்நாடகமாநில அறிவியல் பேரவை திட்டமிட்டுள்ளது.

மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டியை நடத்த கர்நாடகமாநில அறிவியல் பேரவை திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடக மாநில அறிவியல் பேரவை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அறிவியல் பாடப்பிரிவில் பட்டம் படித்துவரும் மாணவர்களிடம் காணப்படும் அறிவுத்திறன், செயல்திறன், போட்டி உணர்வு, அறிவியல் மனப்பான்மையை ஊக்குப்படுத்தும் முகமாக, தொழில்நுட்பத் துறை, கல்லூரிக் கல்வித் துறையின் ஒத்துழைப்புடன் கர்நாடக மாநில அறிவியல் பேரவையின் சார்பில் 5 பிரிவுகளில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிப் போட்டியை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 
மாநிலத்தில் பதிவுபெற்ற பல்கலைக்கழகங்களில் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் பிஎஸ்சி பட்டம் பயின்றுவரும் மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம். 'மனிதகுலத்திற்கான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை' என்ற தலைப்பில் தூய்மை மற்றும் பசுமை ஆற்றல்; உணவு, சுகாதாரம் மற்றும் சுகாதாரம்; விண்வெளி ஆய்வு; சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் மற்றும் பிளாஸ்டிக் மாசை எதிர்ப்போம்; மரபியல் பொறியியல்மற்றும் சுகாதாரம் ஆகிய பிரிவுகளின்கீழ் நடக்கும் இப்போட்டிக்கான கண்காட்சி மாதிரிகளை தயாரிக்கலாம். 
மண்டலவாரியான போட்டி பெங்களூரு,மைசூரு, சிவமொக்கா, மங்களூரு, தார்வாட், கலபுர்கியில் மார்ச் மாதமும்; மாநில அளவிலான போட்டி மே மாதமும் நடக்கவிருக்கிறது. மண்டலவாரியாக முதல் பரிசு, மாநில அளவிலான முதல் மூன்று பரிசுகளும் விழா நடத்தி வழங்கப்படுகிறது. இந்த போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்களிடம் இருந்து மார்ச் 2-ஆம் தேதிக்குள் தகுந்த படிவத்தில் மின்னஞ்சல், கட்செவி வழியாக முன்பதிவுசெய்துகொள்ளலாம். பரிசு பெறுவோருக்கு ரொக்கம் மற்றும் பட்டயம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 080-26718939, 9449530245, 9483549159 ஆகிய தொலைபேசி அல்லது k‌r‌v‌p.‌i‌n‌f‌o@‌g‌m​a‌i‌l.​c‌o‌m என்ற மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com