ஜவுளி தொழில்முனைப்பாற்றல் பயிற்சி முகாம்

பெங்களூரில் மார்ச் 1-ஆம் தேதி ஜவுளி தொழில்முனைப்பாற்றல் பயிற்சி முகாம் நடக்கவுள்ளது.


பெங்களூரில் மார்ச் 1-ஆம் தேதி ஜவுளி தொழில்முனைப்பாற்றல் பயிற்சி முகாம் நடக்கவுள்ளது.
இதுகுறித்து கர்நாடக கைத்தறி மற்றும் ஜவுளித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கர்நாடக கைத்தறி மற்றும் ஜவுளித் துறை சார்பில் பெங்களூரு, விஜயநகர், மாகடிசாலையில் உள்ள கர்நாடக மாநில சிறுதொழில் சங்க வளாகத்தில் மார்ச் 1-ஆம் தேதி முதல் 2 நாள்கள் ஜவுளி தொழில்முனைப்பாற்றல் பயிற்சி முகாம் நடத்தப்படவிருக்கிறது. 
புதிய ஜவுளிக் கொள்கையின்படி ஜவுளித்தொழிலில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் குறித்து பயிற்சி முகாமில் விவரங்கள் வழங்கப்படும். கைத்தறி மற்றும் ஜவுளி அடிப்படையிலான தொழிலில் குவிந்துள்ள வாய்ப்புகள், இதற்காக மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சலுகைகள், தொழில் தொடங்குவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், நிதி ஆதாரங்களை திரட்ட நிதி நிறுவனங்கள் வழங்கும் கடனுதவிகள், திட்ட விவர அறிக்கைகளை தயாரிப்பது, நிதி மற்றும் சந்தை மேலாண்மை உள்ளிட்ட ஜவுளித் தொழில்சார் தகவல்கள் பயிற்சி முகாமில் விவரிக்கப்படும். இந்தப் பயிற்சி முகாமில் பங்கேற்க ஆர்வமுள்ளோர் துணை இயக்குநர் அலுவலகம், கைத்தறி மற்றும் ஜவுளித் துறை, தென்மண்டலம், ஏ.எஸ்.வி.என்.வி. மாளிகை, கெம்பே கெளடா சாலை, பெங்களூரு-560009 என்ற முகவரியில் விண்ணப்பங்களை அளிக்கலாம். மேலும் விவரங்கள் அறிய 080 - 22382666 என்றதொலைபேசி அல்லது   மின்னஞ்சலை அணுகலாம் என்றுஅதில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com